முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் நாற்பத்தி எட்டாவது பிரம்மோற்சவத்தை யொட்டி கருடசேவை தேர்பவனி நடைபெற்றது.
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 48வது பிரம்மோற்சவ விழா செப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலையில், திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறையும், இரவில், சுவாமி புறப்பாடும் நடக்கிறது. விழாவில் நேற்று, கருடசேவை தேர்பவனி நடைபெற்றது. ஏராளமான பக்த்ர்கள் தரிசனம் செய்தனர்.