விழுப்புரம் இந்து ஐக்கிய பேரவை விநாயகர் சிலை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2019 01:09
விழுப்புரம்: இந்து ஐக்கிய பேரவை சார்பில், விழுப்புரம் நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை, பேரவை நிறுவனர் டாக்டர் சரவணன், சிவசேனா மாநில துணைத் தலைவர் போஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாநில இளைஞரணி செயலாளர் அர்ஜூன், மாவட்ட செயலாளர் நடராஜன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் சாரங்கம், ராஜேஷ், கமல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விநாயகர் சிலை ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கடலுார் கடற்கரையில், விஜர்சனம் செய்யப்பட்டது.