பதிவு செய்த நாள்
07
செப்
2019
01:09
செஞ்சி: செஞ்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.செஞ்சி தாலுகாவில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று 64 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.
இதில் பெரும் பகுதி சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைத்து விட்டனர். மீதம் உள்ள சிலைகளை மரக்காணம் கடலில் விஜர்சனம் செய்ய நேற்று 6ம் தேதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
செஞ்சி சத்திரத்தெருவில் நேற்று 6ம் தேதி பிற்பகல் 12.45 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத் திற்கு இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
சத்திரதெருவில் புறப் பட்ட ஊர்வலம் விழுப்புரம் சாலை, திருவண்ணா மலை சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக, மாலை 3.45 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்தடைந்தது. பின்னர், புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட செயலாளர் ராம்குமார், புதுவை கோட்ட தலைவர் சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, விநாயகர் சிலைகளை மரக்காணம் கடற்கரை பகுதியில் விஜர்சனம் செய்வதற் காக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
செஞ்சியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன், டி.ஐ.ஜி., சந்தோஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, விழுப் புரம் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார், செஞ்சி டி.எஸ்.பி., நீதிராஜ் உட்பட 10 டி.எஸ்.பி.,க்கள் 29 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள் 200க்கும் மேற்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படையினர், சிறப்பு காவல் படையினர் என ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.