மரக்காணம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக கொண்டு வரப் பட்டது. மரக்காணம் பகுதியில் உள்ள எக்கியர்குப்பம், கைப்பாணிகுப்பம், தீர்த்தவாரி ஆகிய கடற் கரையில் வைத்து சிலைகளுக்கு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இதன் பிறகு, பைபர்படகுகளில் வினாயகர் சிலைகளை ஏற்றி சென்று கடலில் விஜர்சனம் செய்தனர். இதையொட்டி, கோட்ட குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.