அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே ஆதனுாரில் காளியம்மன், கருப்பசாமி, மாடசாமி, நாகம்மாள், மகா கணபதி, கந்தன் கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று (செப்., 8ல்) மகா பூர்ணாஹூதி ஹோமத்துடன் இரண்டாம் கால பூஜை நடந்தது. பின் யாகசாலையில் இருந்த பல்வேறு புனித ஸ்தல தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அம்மன், சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. அன்ன தானம் வழங்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.