பதிவு செய்த நாள்
09
செப்
2019
01:09
பெசன்ட் நகர்:பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழாவின், முக்கிய நாளான நேற்று (செப்., 8ல்), தேர் பவனி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை, பெசன்ட் நகரில், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளது. இதன், 47வது ஆண்டு பெருவிழா, ’இறைவனின் நற்கருணைப்பேழை மரியாள்’ எனும் தலைப்பில், ஆக., 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருப்பலிகள்தொடர்ந்து, இறையழைத்தல் விழா, இளையோர் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை விழா, உழைப்பாளர் விழா, நலம் பெறும் விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா ஆகிய தலைப்புகளில், திருப்பலிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான நேற்று (செப்., 8ல்), தேர் திருவிழா நடந்தது.மாலை நடந்த கூட்டுத் திருப்பலியில், சென்னை -மயிலை உயர்மறை மாவட்ட பேராயர், ஜார்ஜ் அந்தோணிசாமி பேசினார்.கூட்டுத் திருப்பலியை தொடர்ந்து, தேர் பவனியை பேராயர் துவக்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட மாதா தேர் பவனி, பெசன்ட் நகர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
தேர் பவனியில் பங்கேற்ற பக்தர்கள், மரியே வாழ்க என, பக்தி கோஷம் எழுப்பினர்.
ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் வழியாகச் சென்ற தேர் பவனி, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. முடிசூட்டு விழாஇதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் இறுதி நாளான இன்று, அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில், காலை நடைபெறும் திருப்பலியில், அன்னைக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. மாலை கொடியிறக்கத்துடன், 47வது பெருவிழா நிறைவடைகிறது.