பதிவு செய்த நாள்
09
செப்
2019
02:09
வால்பாறை: வால்பாறையில், இந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 60 விநா யகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது.
வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த, 2ம் தேதி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
வீடு மற்றும் கோவில்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் வழிபட்டனர்.வால்பாறை இந்து முன்னனி சார்பில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதி கோவில்களில், 60 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வால்பாறை நகருக்கு நேற்று (செப்., 8ல்) கொண்டு வரப்பட்டன.அதன்பின், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பக்கம் அனைத்து சிலைகளும் அணிவகுத்தன.
விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நடந்த கூட்டத்தில், இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.விசர்ஜன ஊர்வலத்தை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார்.வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, வாழைத்தோட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் பிரிவு, போஸ்ட் ஆபீஸ் வழியாக நடுமலை ஆற்றில் ஊர்வலம் நிறைவடைந்தது.
அதன் பின், மாலையில் ஆற்றில் கரைக்கப்பட்டது.ஊர்வலத்தில் தாரை, தப்பட்டை முழங்க, இந்து அமைப்பினர், இளைஞர்கள், சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பலத்த பாதுகாப்புஊர்வலம் செல்லும் பகுதி முழுவதும் மொபைல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு செய்யப்பட்டது. விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, வால்பாறை நகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் என, 155 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.