பதிவு செய்த நாள்
09
செப்
2019
02:09
அவிநாசி:திருப்பூர் முக்தி மார்க்கம் டிரஸ்ட் சார்பில், மகாளயபட்ச அமாவாசை மற்றும் முன்னோர் வழிபாட்டு நிகழ்ச்சி, வரும், 15ம் தேதி அவிநாசியில் நடக்கிறது.
தமிழ் ஆண்டில், புரட்டாசி மாதம், 15 நாட்களை உள்ளடக்கிய மகாளயபட்சவிரதம் கடைபிடிக்கப் படுகிறது. முன்னோர்களை வழிபடும் இம்முறை, வரும், 14ம் தேதி துவங்கி, 28 ம் தேதி வரை நடக்கிறது. வரும், 15ம் தேதி மதியம், 2:30 மணி முதல், இரவு, 8:30 மணி வரை, ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தும், மகாளய அமாவாசையின் சிறப்பு மற்றும் முன்னோர் வழிபாட்டு முறைகள் குறித்து, பிரபல ஜோதிடர் ராஜகோபாலன் சுவாமி, நன்னிலம் ராஜகோபால கனபாடி சுவாமி பேசுகின்றனர்.