பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட, சுவாமி சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும், கடந்த, 2ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவ ட்டம் முழுவதும், 655 சிலைகள் வைக்க போலீசார் அனுமதியளித்திருந்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
அவை, சரக்கு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலை களில் கரைக்கப்படுகின்றன. மோகனூர், ப.வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி ஆற்றில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் ஆற்றிலும் கரைப்பதற்காக எடுத்துவரப்பட்ட சுவாமி சிலைகள், கரையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, தோளில் தூக்கிக் கொண்டு, ஆற்றுக்குள் சென்று கரைக்கப்பட்டன. ஒரு அடி முதல், 15 அடி உயரம் வரை, மயில், சிங்கம், புலி, பசுமாடு, ஐந்து தலைநாகம் போன்ற பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பிரமிப்பாக இருந்தன. மோகனூர் காவிரி ஆற்றில், மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில், பூஜிக்கப்பட்ட சிலைகள், 1,200க்கும் மேற்பட்டவை, கடந்த, ஆறு நாட்களில் கரைக்கப்பட்டன.
* பள்ளிபாளையத்தில், இந்து முன்னணி, வி.?ஹச்.பி., சார்பில், 30க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.