பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
ஆத்தூர்: ஆத்தூர், நாவலூர் ஊராட்சி, தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள், 60. இவரது தோட்டத்தில், மீனாட்சி அம்மன் அறக்கட்டளை சார்பில், 1,500 சதுரடியில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டது.
அதன் கும்பாபிஷேகம், நேற்று 8ம் தேதி நடந்தது. காலை, 7:30 மணிக்கு, ஷீரடி சாய்பாபாவின், 4.5 அடி உயர சிலையை, கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து, வேங்கடசுப்ர மணியர் தலைமையில் சிவாச்சாரியார்கள், யாகபூஜை செய்து, கோபுர கலசம் மீது புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். பின், சாய்பாபா ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறக்கட்டளை தலைவர் மீனாட்சி அம்மாள், நிர்வாகி ராமதாஸ், திரைப்பட நடிகைகள் நளினி, அனிதா, நடிகர் ராகுல், இயக்குனர் பகவதி பாலா உள்பட பலர் பங்கேற்றனர். பின், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.