வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் முப்பெரும்விழா, கூட்டுதிருப்பலி, இரவு தேர்பவனி நடந்தது.
நேற்று காலை (செப்.,9) எஸ்.வி.டி., பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் நன்றி திருப் பலியுடன் கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி., அதிபர் ஜோசப் மற்றும் பங்கு தந்தைகள் செய்திருந்தனர்.