பதிவு செய்த நாள்
10
செப்
2019
02:09
விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர்., நகர் துாய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்ப் பவனியில் திரளானோர்பங்கேற்றனர்.இவ்விழாகடந்த ஆக.31 ல் கொடியேற்றத்துடன் துவங்கிதிருப்பலி, மறையுரைநடந்தது.
9ம் நாளான நேற்றுமுன்தினம் (செப்., 8ல்) இரவுவிருதுநகர் மறைவட்ட அதிபர் பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், சிந்தலசேரி பாதிரியார் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையில் தேர்ப்பவனி நடந்தது.தேர் புறப்பட்டதும் கிறிஸ்தவர்கள் ’மரியே வாழ்க’ என கோஷமிட்டு ஜெபங்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.
ஆர்.ஆர்.,நகர், கன்னிச்சேரி புதுார், கல்போது, முதலிபட்டி, இனாம்ரெட்டியபட்டி, ஓ.கோவில் பட்டி, சாத்துார், விருதுநகர், நிறைவாழ்வு நகர், பாண்டியன் நகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.தேர்ப்பவனியை தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலி, மறை யுரை நடந்தது.
இரவு 11:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று (செப்., 9ல்) அதிகாலை 3:00 மணி க்குகொடியிறக்கம் நடந்தது. விழாவில் தினமும் நடந்த நவநாள் திருப்பலியில் பாதிரியார்கள் ஆனந்த், பெரிய நாயகம், தாமஸ்வெனிஸ், போதகர், ராஜ், மத்தியாஸ், ஆல்பர்ட் பங்கேற் றனர். ஏற்பாடுகளை பாதிரியார் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் துாய இதய மரியன்னை சபையினர், பங்குமக்கள் செய்திருந்தனர்.