பதிவு செய்த நாள்
10
செப்
2019
02:09
சென்னை:பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், சிறப்பு ஹோமங்களுடன் பவித்ர உற்ச வம், கோலாகலமாக துவங்கியது.
இறைவனின் சக்தி மூலம் விளையும் பலன்களை, பக்தர்களுக்கு அதிகரித்து கொடுக்க வேண் டும் என்பதற்காக சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில், பவித்ர உற்சவம் நடத்தப்ப டுகிறது. பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, செப்., 8ம் தேதி முதல் யாக குண்டங்கள் அமைத்து, முளைப் பாலிகையிட்டு, பட்டு நுால் சார்த்தப்பட்டது.
இதற்காக, தெற்கு திசையில், ’பிரத்யும்னன்’ எனும் அரை வட்ட வடிவம்; மேற்கில் ’அனிரு த்தன்’ எனும் வட்ட வடிவம்; வடக்கில் ’சங்கர்ஷணம்’ எனும் முக்கோண வடிவம்; கிழக்கில் ’வாசுதேவன்’ எனும் சதுர வடிவம் உடைய குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை, ’நவ பத்ம மண்டலம்’ எனும் யந்திரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்னி மூலையில், ’மகா கும்ப’ ஸ்தாபனம், 10 கும்பங்களும், ஈசான மூலையில், ’சோம கும்ப’ ஸ்தாபனம், 10 கும்ப ங்களும் அமைக்கப்பட்டுள்ளன.அதில், பஞ்சராத்திர ஆகம ஜெயாக்கிய பிரிவின் விதிப்படி, ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. செப்., 13ம் தேதி மாலை, மகா பூர்ணாஹுதியுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.