மேட்டுப்பாளையம் ஆரோக்கிய அன்னை சர்ச்சில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2019 02:09
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக காரமடை சாலையிலிருந்து ஆரோக்கிய மாதாவின் உருவம் பொறித்த கொடியை, பங்கு பாதிரி யார் ஜேக்கப் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.வரும் 14ம் தேதி வரை தினமும், திருப் பலி, நவநாள் ஜெபம் நடைபெற உள்ளன. 15ம் தேதி காலை, 8:00 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறு கிறது. மாலையில் திருவிழா திருப்பலி முடிந்த பிறகு, ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.