எரியோடு வெள்ளைமாலை வீருதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2019 03:09
எரியோடு: எரியோடு பேரூராட்சி எ.பண்ணைப்பட்டியில் வீரக்கல் சவடம்மன் கோயிலின் இரண்டாம் கரையான வெள்ளைமாலை வீருதியம்மன் கோயில் உள்ளது. கடந்த 1915 ஆண்டி ற்கு முந்தைய காலத்தில் இக்கோயில் உருவானது.
தற்போது புதுப்பொலிவுடன் அதிக பரப்பில் பெரிய மாலைக் கோயிலாக மாற்றியுள்ளனர். கூடுதலாக செல்வ கணபதி, கன்னிமார், ஜக்கம்மாள், எரசிக்கம்மாள், கருப்பசுவாமி தெய் வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த செப்.9ல் துவங்கி நேற்று 11ம் தேதி காலை வரை நான்குகால யாக பூஜைகளாக நடந்தன. பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோபுர கும்பங்களில் புனிதநீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் சூடாமணி அருளாட்சி சித்தர் பீட நிர்வாகி விஸ்வபாரதி தலைமை வகித்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் சங்க செயலாளர் நடராஜன், வீரக்கல் சவடம்மன் கோயில் தலைவர் காளியாயி ராமசாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.