பதிவு செய்த நாள்
12
செப்
2019
05:09
கிருஷ்ணகிரி: மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 11ம் தேதி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (செப்., 10ல்) காலை, 10:30 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், மூலவர் மஹா மாரியம்மன் கற்சிலை கரிகோல ஊர்வலம் ஆகியவையும், மாலை, 6:00 மணிக்கு, முலைப்பலிகை கொண்டு வருதல் ஆகிய வை நடந்தன. நேற்று 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்படுதல் ஆகியவையும், 10:30 மணிக்கு, மஹா மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி அலங்காரம், கோ பூஜை, சப்த கன்னி பூஜை, சுமங்கலி பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மஹா மாரியம்மன் ஸ்தாபன குழுவினர் செய்திருந்தனர்.