கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2019 01:09
கள்ளக்குறிச்சி: க.மாமனந்தல் ரோடு முத்துமாரியமன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் க.மாமனந்தல் ரோடு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா சக்தி அழைத்தல், கொடியேற்றத்துடன் கடந்த 4ம் தேதி துவங்கியது.
தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் கோபூஜை, காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண வைபவம் நடந்தது. தேர்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அங்கபிரதட்சனம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், காளி கோட்டை இடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்தனர். பின்னர், தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.