பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், மழை நீர், குட்டை போல தேங்குவதால், சுவாமி தரிசனம் செய்ய வரும், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், பிரதான கோவிலான ஏகாம்பரநாதர் கோவில், 23 ஏக்கர் பரப்பில், ஐந்து பிரகாரங்களுடன் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட உற்சவ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று 12ம் தேதி இரவு பெய்த மழையில், இக்கோவில் வளாகத்தில், குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது.ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில், பக்தர்கள், சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, மழை நீர் தேங்காத வாறு, பிரகாரத்தை சமன்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.