பதிவு செய்த நாள்
15
செப்
2019
02:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலை, மீனாட்சி நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 12ம் தேதி, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.கும்பாபிஷேக தினமான, நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவருக்கு கலசாபிஷேகமும், 10:45 மணிக்கு, சுவாமிக்கு மஹா அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.