பதிவு செய்த நாள்
16
செப்
2019
01:09
அவிநாசி:”பக்தி மார்க்கம் வழி நடந்தால், உலகில், தவறே நடக்காது” என, ராஜகோபாலன் சுவாமி கூறினார்.திருப்பூர், முக்தி மார்க்கம் டிரஸ்ட்டின், 5வது ஆண்டு விழா, அவிநாசி பழனி யப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நேற்று நடந்தது. மஹாளய அமா வாசை மற்றும் முன்னோர் வழிபாடு குறித்த, சொற்பொழிவு நடந்தது.
டிரஸ்ட் நிறுவனர் குமரன், தலைமை வகித்து பேசுகையில், ’அறக்கட்டளை சார்பில், இது வரை, 310 அனாதை பிணங்களை, நல்லடக்கம் செய்துள்ளோம். ஆண்டுதோறும் பிண்டம் வைத்து, தர்ப்பணம் கொடுத்து வருகிறோம்,” என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் ராஜகோபாலன் சுவாமி பேசியதா வது: வாழ்க்கையில் தர்மம், என்பது ஆல விருட்சம் போன்றது; அதுதான், புண்ணியம் தேடி தரும். ஒருவர் தேடும் புண்ணியம் தான், அவருக்கான நல்ல கல்வி, வேலை, மனைவி, பிள்ளைகள், சொத்து போன்றவை கிடைக்க காரணமாக உள்ளது.
தற்போதைய நிலையில், பல புதிய, கொடிய நோய்கள் வருகின்றன. ஆனால், முன்னோர் காலத்தில் இத்தகைய நோய்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதற்கு காரணம், அவர் கள் செய்த தர்ம, புண்ணிய காரியங்களும் தான்.இந்து தர்மமே, மிகச்சிறந்தது; முக்தி மார்க் கம் தான், பக்தி மார்க்கத்துக்கான வழி. பக்தி வந்துவிட்டால், உலகில், தவறே நடக்காது. இவ்வாறு, அவர் பேசினார்.பின், பங்கேற்றவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, கிருஷ்ண கனபாடி, விளக்கமளித்தார். நிகழ்ச்சியில், சிறுமுகை தண்டபாணியின், ராம நாம கனா சபா குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.