பதிவு செய்த நாள்
16
செப்
2019
01:09
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, கொழுமத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலையில் பூஜைகள் துவங்கின.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்குள்ள அம்மன் லிங்கம் வடிவில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இக் கோவிலில் இன்று 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேக நிகழ்ச்சி மங்கள இசையுடன் நேற்று முன்தினம் (செப்., 14ல்) தொடங்கியது. நடராஜர் கோவிலில் இருந்து பூஜை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.
நேற்று 15ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலையில், மூன்றாம் கால யாகபூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமமும் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக இன்று 16ம் தேதி, அதி காலை நான்காம் கால யாக பூஜையும், காலை, 5:00 முதல் 5:30 மணிக்குள் கோட்டை மாரியம் மன் கோவிலின் ராஜகோபுரத்துக்கும், 5:30 முதல் 6:00 மணிக்குள் விநாயகர், கோட்டை மாரிய ம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தசதரி சனம், மகா அபிஷேகம், அன்னதானமும் நடைபெறுகிறது.