Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: புரட்டாசி ராசி பலன் (மூலம், ... கும்பம்: புரட்டாசி ராசி பலன் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிள்ளைகளால் பெருமை கும்பம்: புரட்டாசி ராசி பலன் ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: புரட்டாசி ராசி பலன் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்ப மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: புரட்டாசி ராசி பலன் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குடும்ப மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:09

இந்த மாதம் குரு, ராகு தொடர்ந்து நன்மை தருவர். சுக்கிரன் அக்.5 வரையும், புதன் செப்.25க்கு பிறகும் நற்பலன் தருவர். தடைகள் பல குறுக்கிட்டாலும் விடாமுயற்சியால் எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.

ராகு உங்களுக்கு எண்ணற்ற பல நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்களால் நன்மை சேரும். பொருளாதார வளம் கூடும். செப்.௨5க்கு பிறகு சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக அக். 7,8,9 ல் அவர்கள் உதவிகரமாக செயல்படுவர். அக்.3,4ல் உறவினர் வருகையும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். செப்.18,19,அக்.15,16ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய பணி, இடமாற்றம் பெறலாம். செப்.25 வரை சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பொறுமை தேவைப்படும். அதன் பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப்.30,அக்.1,2 ல் சிறப்பான பலனைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகள் வளர்ச்சியான சூழ்நிலையைச் சந்திப்பர். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து செப்.25க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு உங்களின் வளர்ச்சிக்கு பெண்கள்  உறுதுணையாக இருப்பர்.  வெளியூர் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்திலும் வருமானம் அதிகரிக்கும். செப்.22,23ல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு.  பகைவரை எதிர்த்து வெற்றி பெறும் ஆற்றல் பிறக்கும். அக்.5,6,10,11ல் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மளமளவென கையெழுத்தாகும். சக கலைஞர்கள்  ஆதரவுடன் இருப்பர். அக்.5க்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் அதிகமிருக்கும். அவப்பெயர் உருவாகலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேகவர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். செப்.20,21, அக்.17ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும். செப்.25 வரை  சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. எனவே யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம்.

விவசாயிகள் உழைப்பிற்கு தகுந்த மகசூல் கிடைக்கப் பெறுவர். செப்.25க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில மாதம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.   

பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலமாக இருப்பர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தோழிகள் உறுதுணையாக செயல்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.12,13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செப்.24,25ல் விருந்து, விழா என செல்வீர்கள். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.  அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். செப்.25க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர்.  மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.

சிலர் பதவி உயர்வு பெறுவர். உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் செப்.26 க்கு பிறகு மறையும். பயணத்தின் போது  கவனம் தேவை.

* நல்ல நாள்: செப்.22,23, 24,25,30, அக்.1,2,3,4,7,8, 9,12,13,14
* கவன நாள்: செப்.26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,6
* நிறம்: மஞ்சள், நீலம்  

பரிகாரம் :
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  வெள்ளி மாலையில் மகாலட்சுமிக்கு நெய்தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar