நகரி : முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வி.ஐ.பி., தரிசனத்திற்காக காலை மற்றும் மாலையில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் மற்ற நேரங்களிலும் வி.ஐ.பி., தரிசனத்திற்கு அனுமதி வழங்குவதால் பல லட்சம் பக்தர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருவதாக எழுந்த புகாரை அடுத்து தேவஸ்தான குழு இம்முடிவை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் இந்த கட்டுபாடுகளில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.