பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தில் இலக்கிய சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2019 01:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் கூட்டம் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் நடந்தது.கூட்டத்துக்கு, மன்ற தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மன்ற துணைத்தலைவர்கள் செல்லம்மாள், தருமராசு, டாக்டர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.
புதுடில்லி தமிழ் சங்கத்தில் உரையாற்றிய சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு நினைவு நுாலை, கவிஞர் சண்முகானந்தம் வழங்கினார். ’கவிராஜனும், கப்பலோட்டிய தமிழனும்’ என்ற தலை ப்பில் திருவாடுதுறை ஆதின பேராசிரியர் செயசிங் லிங்கவாசகம் பேசினார். குழந்தை ஜிப்ரா ஜன் அகமதுவின் பன்முக ஆற்றல்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பெருமாள்சாமி பேசினார்.
விழாவில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாரதியாரின் கவிதைகள் பரிசாக வழங்கப்பட்டது. மன்ற இணைச் செயலாளர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். துணைச் செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.