பதிவு செய்த நாள்
20
செப்
2019
11:09
பழநி: புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகையை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் உச்சிகால பூஜையில் குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பழநிமலைக்கோயில் முருகருக்கு அபிஷேகம், பூஜையும், பக்தி இன்னிசை, சொற்பொழிவுகள் நடந்தது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையில், திருமுருக பக்த சபா மூலம் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனம், தங்கரதப் புறப்பாட்டில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பெரியநாயகியம்மன்கோயில், திருஆவினன்குடியிலும் கார்த்திகையை முன்னிட்டு, குழந்தைவேலாயுதசுவாமி, முத்துக்குமாரசுாவமி, வள்ளி, தெய்வானை, அபிேஷகம், சுவாமிப் புறப்பாடு நடந்தது.