கமுதி: கமுதி அருகே பக்தர்கள் உடல் முழுவதும் சாக்கு அணிந்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி அருகே செங்கப்படையில் அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், விளையாட்டு போட்டிகள், முளைப்பாரி ஊர்வலம், சேத்தாண்டி வேடமணிந்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதிநாளான நேற்று பக்தர்கள் சணல் சாக்கு பைகளைஆடைகளாக தைத்து அதற்குள் வைக்கோலை இறுக்கமா திணித்தனர். ஊசிகளால் சணலை வைத்து தைத்து, மேள, தாளங்கள் முழங்க பக்தர்களுடன், பொதுமக்களும் ஆடி, பாடிமுக்கிய வீதிகளின் வழியாகஊர்வலமாக சென்றனர். கமுதி – சாயல்குடி ரோட்டில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர்.