Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் ... உடுப்பி விஸ்வேந்திர சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி சர்வோதய சங்கத்தில் கண்கவர் கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
12:51

விருதுநகர்: ஆதிபராசக்தி தேவி ஆனவள் அரக்க குணம் படைத்த மகிசாசூரனை  அளிக்க 9 நாட்கள் விரதமிருப்பாள். இதை நாம் நவராத்திரி விழாவாக கொலு வைத்து கொண்டாடு கிறோம். இதில் கொலு பொம்மைகள்  குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும்.

புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில்  துவங்கி நவமி வரை 9 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள்  விரும்பி செய்யும் தெய்வீக திருவிழாவாகும்.  இந்நாட்களில் வீட்டை  அலங்கரித்து  கொலு அமைத்து வீட்டிற்கு சுமங்கலி பெண்கள், கன்னி  பெண்களை அழைத்து தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்வர்.

சுண்டல், பருப்பு போன்ற பிரசாதங்களும் வழங்குவர். நவராத்திரி முதல் 3  நாட்களில்  தைரி யத்தை  வேண்டி பராசக்தியை வழிபட வேண்டும். அடுத்த  3 நாட்களுக்கு செல்வத்தை வேண்டி  மகாலெட்சுமியை வழிபட  வேண்டும்.

இறுதி 3 நாட்களில் கல்வி, அறிவு, கலை   வேண்டி சரஸ்வதி தேவியை  வழிபட வேண்டும். முன்னோர்கள் வழிபடும் கொலுபடிக்கு ஒரு வரலாறு  உண்டு. கொலுவில் ஒன்பது படிகள் வைக்கலாம். ஒன்பது படிகள் வைக்க  முடியாதவர்கள் முப்பெரும் தேவியை குறிக்கும் வகையில் 3 படிகள்  வைக்கலாம். சக்தியின் சக்கரமான 5 படிகளையும் வைக்கலாம். சப்த  மாதர்களை குறிக்கும் 7 படிகளும் வைக்கலாம். கொலுப்படிகளில் முதல்  படியில் ஓரறிவு உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர  பொம்மைகள் வைக்கப்படுகிறது.

2ம் படியில் இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்  வைக்கப்படுகிறது. 3ம் படியில் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள்  வைக்கப்படுகிறது. 4 வது படியில் நண்டு, வண்டு  என பொம்மைகள்  வைக்கப்படுகிறது. 5ம் படியில் விலங்குகள், பறவைகள் வைக்கப் படுகிறது.

6ம் படியில் மனித  பொம்மைகள், 7ம் படியில் மகாரிஷிகளின் படங்கள்  (ரமணர், வள்ளலார்) வைக்கப்படுகிறது. 8ம் படியில் தேவர்களின்  உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்கள், 9ம் படியில்  மும்மூர்த்திகளான பிரம்மா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி, லெட்சுமி, சக்தி  தேவி ஆகிய தெய்வங்கள் வைக்கப்படுகிறது.

நவராத்திரி கொலுவானது, மனிதன் பல்லுயிர்களுடன் படிப்படியாக  தன் ஆன்மிக சிந்தனை களை வளர்த்து இறுதியாக இறைவனுடன் கலக்க  வேண்டும் என தத்துவத்தை சொல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விருதுநகரில் சர்வோதய சங்கத்தின் கதர்பவனில் நவராத்திரி திருவிழா வை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை நடத்தப்படுகிறது. இந்தாண்டும் செப். 13ல் துவங்கி உள்ளது. குழுபொம்மைகளில் புது வரவாக சோட்டா பீம் செட், கிருஷ்ண போஜனம், விநாயகர் போஜனம், தசாவதாரம், நவசக்தி, ஆண்டாள் திருக்கல்யாணம், மீனாட்சி பிறப்பு, அகலிகை சாபவிமோசனம், வளைகாப்பு, காமதேனு ஆகிய ’செட்’கள் வந்துள்ளன.

தனி பொம்மைகளாக ஹயக்ரீவர், சாய்பாபா, குடை விநாயகர், பால  அம்பிகை, தவழும் கிருஷ்ணர், கற்பக விருட்சம் ஆகியவை வந்துள்ளன.  கடவுள்களின் குழந்தை பொம்மைகள் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.  அக். 7 வரை இக்கண்காட்சி, விற்பனை நடக்கிறது. தொடர்புக்கு 94890 79042, 04562 245 163.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை : பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு 7:30 மணிக்கு அடைக்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, வயலூர் பூவாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple
 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பனில், சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, கடல் நீர் சூழ்ந்துள்ளது. ... மேலும்
 
temple
 உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, ... மேலும்
 
temple
உத்தர பிரதேசம்: பிரயாக்ராஜ், கங்கை தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, அகில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.