பதிவு செய்த நாள்
05
ஏப்
2012
12:04
ஓசூர்: மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் மஷா கும்பிஷேக விழா வரும் 8ம் தேதியும், தேர்த்திருவிழா 11ம் தேதியும் நடக்கிறது. ஓசூர் அடுத்த மத்திகிரியில் தேன்கனிக்கோட்டை சாலையில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து மஷா மண்டபம் அமைத்து வர்ணகாலபங்கள் செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், மஷா கும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி 6ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, ஸ்ரீ மஹா கணபதி பூஜை, நவக்கிரஹ பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு கிராம பெண்கள் தண்ணீர் எடுத்து வரும் நிகழ்ச்சி 10 மணிக்கு யாக சாலை அலங்காரம், அக்னி சங்கரஹனம் ஆகியவை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்பலங்காரம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு கெடஸ்தாபனம், யாக பூஜை ஹோமம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபராதனை ஆகியவை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு விசேஷ சந்தி, யாக பூஜை ஹோமம், நடக்கிறது. காலை 10.30 மணிக்கு யாகபூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தொடர்ச்சியாக இரவு வரை நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 7.30 மணிக்கு யாகபூஜை ஹோமம், தத்வார்ச்சனை, 10 மணிக்கு திரவிய ஹோமம், 10.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்தாதானம், கெங்கள் புறப்படுதல், 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கவுன்சிலர் வாசுதேவன், சிவண்ணா ஆகியோர் செய்து வருகின்றனர்.
* வரும் 11ம் தேதி கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது. திருவிழா மிடிகிரிப்பள்ளி கிராமத்தினரால் நடத்தப்படுகிறது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தில் இருந்து மத்திகிரி ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேர் மேலதாளங்களுடன் கொண்டு வரப்படுகிறது. மத்திகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அம்மனுக்கு மா விளக்கு எடுத்து வந்து பூஜை செய்யப்படுகிறது.