பதிவு செய்த நாள்
23
செப்
2019
02:09
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ராகவேந்திர மடத்தில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ராமாயணத்தில் தர்மத்திற்கு எதிராக செயல்பட்ட வாலியை, ஸ்ரீ ராமர் அம்பு எய்து தாக்கினார்.
படுகாயத்துடன் வாலி, ’ராமா மறைந்திருந்து ஏன் தாக்கினீர்கள், நான் அயோத்திக்கு பாரமாக வா இருந்தேன். நானும் என் தம்பியும் (சுக்ரீவன்) சண்டையிட்ட போது குறுக்கே ஏன் அம்பு எய்தீர். ராவணன் உன் மனைவியை துாக்கி சென்றதற்காக வானர தலைவனை ஏன் தாக்கி னாய்.நீ சுக்ரீவனுடன் சேர்ந்ததற்கு என்னுடன் சேர்ந்திருந்தால், ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு கொடுத்திருப்பேன்,’ என்றார். அதற்கு ராமர், ’உன் தம்பியை ஏன் அடித்து விரட்டி விட்டு அவரது மனைவியை கவர்ந்தாய்,’என்றார். அப்போது வாலி,’இச்செயல் மனித குலத்தில் தவறு, ஆனால் நாங்கள் வானரம் ஒருவர் மனைவியை வேறொருவர் துாக்கி செல்வது இயல்பு,’என்றார். ’எப்போது நீ மனித தர்மம், விலங்கு தர்மம் என பாகுபாடு பார்த் தாயோ, அப்போதே நீ மனிதன் ஆகி விட்டாய், அதனால் தான் உன்னை தாக்கினேன்,’ என ராமர் கூறினார்.குற்றம் செய்தவனை விட அக்குற்றத்திற்கு துணை நிற்பவன் முதல் குற்ற வாளி, அவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என ராமர் கூறி, தவறை உணர்ந்த வாலிக்கு மோட்சம் அளித்தார் என பேசினார்.