பதிவு செய்த நாள்
25
செப்
2019
11:09
தேனி : பாரம்பரியமும், கட்டட கலை நயமும் மிகுந்ததாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் விளங்குவதாக இத்தாலி சுற்றுலா பயணிகள் பெரு மிதத்துடன் பாராட்டினர். இத்தாலியில் உள்ள இறையியல் கல்லுாரி பேராசிரியர் டேவிட் தலைலமையில் 11 ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியாவிற்கு 15 நாட்கள் சுற்றுலா வந்தனர். பெங்களூரூ, மைசூர், ஒசூர், சேலம் ஏற்காடு வழியாக மதுரை வந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களை ரசித்தனர். பின்னர் இவர்கள் தேனி வந்தனர். செப்.23 முதல் 27 வரை சுற்றுலா வாரம் என்பதால் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, அங்கீகாரம் பெற்ற ரங்கா டிராவல்ஸ் இயக்குனர் ரவிச்சந்திரன் , சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர். கும்பக்கரை அருவியை ரசித்தனர்.
பேராசிரியர் டேவிட் கூறுகையில் தமிழகத்தில் மதுரை பாரம்பரியமும், கலாச்சர நகராக திகழ்கிறது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை சுற்றி நகரை வடிவமைத்தது சிறப்பு. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மண்டபம் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந் நகருக்கு தனி வரலாற்றை கேட்டபோது வியப்பாக இருந்தது.மதுரையில் ஒரே பள்ளி, கல்லுாரிகளில் 2 ஆயிரம், 5 ஆயிரம் மாணவர்கள் என படிப்பது பெருமையாக உள்ளது. இத்தாலியில் ஒரே கல்லுாரியில் இவ்வளவு எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பது இல்லை. தேனியில் உள்ள காலநிலை இத்தாலியில் உள்ளது போல் குளு, குளுவென இருப்பதை உணர்கிறோம், என்றார். இக் குழுவினர் அடுத்து தேக்கடி, கேரளா, மகாபலிபுரம், காசி, கயாபோன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.