பங்குனி உத்திரப் பெருவிழா வழிவிடு முருகன் கோயிலில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2012 02:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் 72வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை, அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர விழா இன்று நடைபெற்றது.. காலை 8 மணிக்கு முருகன் கோயிலில் இருந்து புறப்பாடு ஆகும் உற்சவர், நொச்சிவயல் ஊரணிக்கரையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலை அடைகிறார். காலை 10.30 மணிக்கு பால்குடம், பால்காவடிகளுடன் அங்கிருந்து புறப்பாடு ஆகி மீண்டும் வழிவிடு முருகன் கோயில் வந்தார். மதியம் 12.30க்குள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 7.45 முதல் 8.15க்குள் பூக்குழி நடக்கிறது. இதில் இறங்கி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இன்று முருகன், வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை தர்மகர்த்தா தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.