பதிவு செய்த நாள்
25
செப்
2019
12:09
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா செப்.,28 முதல் அக்.,8 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ளது.நவராத்திரி திருவிழா செப்.,28 காலை 9:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிேஷகத்துடன் துவங்குகிறது. இரவு கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. செப்.,29 ல் காலை 5:30 முதல் 6:00 மணிக்குள்கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு விளக்கு பூஜை, லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.
இரவு 9:45க்கு அம்மன் தங்க கேடயத்தில் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் ரிஷபம், வெள்ளி சிம்மாசனம், சிம்ம வாகனம், அன்ன வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அக்.,8ல் தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினிகோலத்தில் இரவு 7:00 மணிக்கு எழுந்தருளுகிறார். திருவிழா நாட்களில் தினசரி ஆன்மிகசொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரைஅறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு ஆகியோர் செய்து வருகின்றனர்.