தில்லை காளியம்மன் உண்டியல் காணிக்கை ரூ.7.74 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2019 12:09
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில் 7.74 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி கோவில் மகா மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்களை திறந்து இந்து சமய அறநிலையத் துறை கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் சுய உதவிக் குழுவினர் எண்ணினர். ரூ. 7 லட்சத்து 74 ஆயிரத்து 416 ரொக்கம் இருந்தது. தங்கம் 24 கிராம், வெள்ளி பொருட்கள் 115 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் மலேசியா ரிங்கட் 79, அமெரிக்க டாலர் 2, சிங்கப்பூர் டாலர் 10, என 91 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. இந்த தொகை சிதம்பரம் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், சிதம்பரம் சரக ஆய்வாளர் ராமநாதன், கோவில் மேலாளர் வாசு, அலுவலர்கள் ராஜ்குமார், ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.