ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அக்.,8 ல் கோயில் நடை அடைக்கப்படுகிறது.
செப்., 28ல் ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா துவங்க உள்ளது. அன்று முதல் அக்.,8 வரை கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் அன்ன பூரணி, துர்க்கை, மகாலெட்சுமி உள்ளிட்ட பல அவதாரத்தில் அலங்கரிக்கப்படுவார். அக்.,8 விஜயதசமியில் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பட்டு மகர் நோன்பு திடலில் எழுந்தருளி மாலை 6:00 மணிக்கு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் அன்று மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். பின் கோயிலுக்கு அம்மன், பஞ்சமூர்த்திகள் திரும்பியதும் பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் கோயில் நடை மூடப்படும், என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.