பதிவு செய்த நாள்
27
செப்
2019
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 29ல், நவராத்திரி விழா தொடங்குகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும், 29ல் தொடங்கி, அக்., 8 வரை நடக்கிறது.
இதையொட்டி, கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், தினமும் மாலையில், பல்வேறு அலங்காரங்களில் பராசக்தியம்மன் அருள்பாலிப்பார். முதல் நாளான வரும், 29 மாலை வாணவேடிக்கையுடன் அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைகிறார். தொடர்ந்து, பராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். 30ல் ராஜராஜேஸ்வரி அலங்காரம், அக்., 1ல் கெஜலட்சுமி, 2ல் மனோன்மணி, 3ல் ரிஷப வாகனம், 4ல் ஆண்டாள் அலங்காரம், 5ல் சரஸ்வதி, 6ல் லிங்கபூஜை, 7ல் மகிஷாசூரமர்த்தினி, 7ல் சந்தனக்காப்பு அலங்காரம், விஜயதசமி நாளான அக்., 8ல் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தியம்மனுக்கு அபிஷேகம், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.