வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் பத்ரகாளியம்மன் கோயில் விழா செப்.,24ல் சக்தி கரகம் மஞ்சளாற்றில் இருந்து அழைத்து வருதலுடன் துவங்கியது. 25ல் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று அம்மன் கும்மிப்பாடல், முளைப்பாரியுடன் ஊர்வலம் வந்தார். அன்னதானம், வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.