புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம். அதனால் புரட்டாசியில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர், வீரராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கருட வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.