தமிழகத்தில் பெரிய ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தியதில் காஞ்சிபுரம் அத்திவரதருக்கு முக்கிய பங்குண்டு. நாற்பதாண்டுகளுக்கு பின் சயன, நின்ற கோலத்தில் 48 நாட்கள் அருள் பாலித்ததை ஒரு கோடி பேர் கண்டு தரிசித்தனர்.
இந்தாண்டு நவராத்திரி விழாவின் சிறப்பு வரவாக அத்தி வரதர் பொம்மைகள் அதிகளவில் அனைவரையும் கவருவதாக உள்ளன. நவராத்திரிக்கு வீட்டு கொலுவை அலங்கரிக்க பொம்மைகள் வாங்குவதில் பெண்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை டவுன்ஹால் ரோடு மாவட்ட சர்வோதய சங்க காதி கிராமோத்யோக் பவனில் சுவாமி, அரசியல் தலைவர் பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், திருக்கல்யாண ஊர்வலம் போன்ற செட் பொம்மைகள் உள்ளன. விளாச்சேரி மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களிலி ருந்து வந்துள்ள பொம்மைகள் பார்ப்போரை கவரு வதாக உள்ளன.நவராத்திரியையொட்டி பத்து சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது என சர்வோ தய சங்க செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.கொலு பொம்மை வாங்க 0452 -234 0184.