மதுரை வைகை மைய மண்டபத்தில் கிரானைட் சித்திர தூண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2019 02:09
மதுரை : மதுரை யானைக்கல் பகுதி வைகை ஆறு மீனாட்சி கோயில் மைய மண்டபத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மண்டபத்தில் பொருத்துவதற்காக சித்திர துாண்களை செதுக்கும் பணி ஜரூராக நடக்கிறது.
புதுக்கோட்டை ஸ்தபதி குமார் கூறியதாவது: மைய மண்டபத்தில் இருந்த 36 துாண்களில் 23 துாண்கள் சிதிலமடைந்து விட்டன. மீதமுள்ள 13 து ாண்களுக்காக சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை செதுக்கும் பணி நடக்கிறது. 8 அடி உயரம், ஒரு டன் எடை கொண்ட கற்களின் மேல், மையப் பகுதியில் பூக்களை செதுக்குகிறோம். கீழ் பகுதியில் சிற்பங்களுடன் கூடி பூக்களை செதுக்க உள்ளோம்.
சிதிலமடைந்த பழைய துாண்களில் சில பயன்படுத்தும் நிலையில் இருப்பதால் அதை மீண்டும் பொருத்த திட்டமிட்டுள்ளோம். மண்டபத்தின் அடித்தளத்தை சுற்றி ’பத்ம ஜகதி’ என்று சொல்லக்கூடிய தரைமட்டமாக இருக்கக் கூடிய சிறியளவிலான சுற்றுச்சுவர்களும் சேதமடைந்துள்ளன. அங்கேயும் கிரானைட் கற்களை செதுக்கி பொருத்துகிறோம்.
ஆறு மாதங்களுக்கு முன் துவங்கிய இப்பணி சில மாதங்களில் நிறைவு பெறும். ஸ்தபதி பாண்டியன் தலைமையில் பணியாளர்கள் பழமை மாறாத கல் துாண்களாக செதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.