மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா துவங்கியதை அடுத்து கோயிலில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான கொலுபொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கடந்த 2 வருடங்களாக கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்ததால் நவராத்திரி திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததால் இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது,விழாவின் முதலாம் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலை சுற்றி மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு கொலு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.