பதிவு செய்த நாள்
01
அக்
2019
03:10
கடலுார் : வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், நவராத்திரி பெருவிழா கொலு உற்சவம், துவங்கியது.
கடலுார், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா கொலு உற்சவம், கடந்த 29ம் தேதி துவங்கி, வரும் 9ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. தினசரி காலை 7:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், 8:00 மணிக்கு மகா தீபாராத னை, மாலை 6:30 மணிக்கு மேல் சகஸ்ரநாம அர்ச்சனை, பஜனை பாடல்கள், இரவு 8 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. கொலு உற்சவத்தையொட்டி, 29ம் தேதி முத்துமாரியம்மன் அவதார காட்சி, 30ம் தேதி காமாட்சி அவதார காட்சி நடந்தது.
இன்று (அக்., 1ல்) மீனாட்சி அவதாரம், 2ம் தேதி விசாலாட்சி சிவபூஜை, 3ம் தேதி பராசக்தி, 4ம் தேதி மகாலட்சுமி, 5ம் தேதி பெருமாள் தாயார், 6ம் தேதி அன்னபூரணி, 7 ம் தேதி சரஸ்வதி தேவி, 8 ம் தேதி மஹிஷாசுர மர்தினி அவதார காட்சி நடக்கிறது. தொடர்ந்து 9ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.