கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழ நல்ல கருத்துக்கள் இங்கு தரப்பட்டுள்ளன. * திருமண ஆராதனைக்கு ஆலயமணி ஒலித்த நாளன்று இருந்த அன்பும், கனிவும், கரிசனமும் என்றென்றும் தொடரட்டும். * நண்பர் போல நகைச்சுவை உணர்வுடன் தம்பதிகள் பழக வேண்டும். * அன்றாட உணவுக்காக இருவரும் நன்றி சொல்லவும், ஆலய வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்கவும் வேண்டும். * ஒருவரை ஒருவர் அதைரியப்படுத்தும் வார்த்தைகளை பேசக் கூடாது. * பிரச்னைகளின் போது உறவினர் தலையீடு இல்லாமல், விட்டுக் கொடுத்து தீர்க்க முயலுங்கள். * வருமானத்திற்கு ஏற்ப, வீட்டுச் செலவைக் கையாள வேண்டும். * உண்மையோடும், அன்போடும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்துங்கள்.