சத்திய லோகத்தில் ஒருநாள் பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் ஜபித்தார். எதிரில் சரஸ்வதி வீணை இசைத்தாள். திடீரென சிங்கம் கர்ஜிக்கும் சப்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த பிரம்மா கீழே விழுந்தார். அவர் எழுந்த போது தூணைப் பிளந்தபடி மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்த காட்சி தெரிந்தது. இந்திரன், குபேரன், சந்திரன் போன்ற தேவர்கள் எவ்வித இடையூறு இல்லாமல் பணியில் ஈடுபட்டிருக்க பிரம்மாவிற்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற சந்தேகம் எழுந்தது. ’ஏனெனில் இரணியனுக்கு அசுர பலத்தை கொடுத்தது பிரம்மா தான். இரணியன் போன்றவர்களுக்கு வரம் தருவது கூடாது’ என்பதை கர்ஜனை மூலம் நரசிம்மர் உணர்த்தினார்.