மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நூறாண்டு காலம் பூமியில் வாழலாம். ஆனால் நிலையில்லாத வாழ்வை உணர்ந்து தினமும் நெற்றியில் விபூதி பூச வேண்டும். ’சிவாயநம’ என்னும் மந்திரம் ஜபிக்க வேண்டும். ’சிவாய நம என்று சிந்தித்தால் அபாயம் ஏற்படாது’ என்கிறார் அவ்வையார். பசுஞ்சாணத்தால் கிடைத்த சாம்பல் தான் விபூதி. இதைப் பூசும் போதும் “என்றாவது ஒருநாள் சாம்பலாக போகும் நான், சம்பாதித்த பணத்தில் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும்” என பிரார்த்திக்க வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். நிம்மதியான இறுதிக்காலம் அமையும்.