பொருள்: எதிரிகளை வெல்பவனே! என் தெய்வீகமான பெருமைக்கு எல்லை இல்லை. விரிவான அதில் ஓரளவே எடுத்துச் சொன்னேன். எது சிறப்பு மிக்கதோ, எது ஒளி கொண்டதோ, எது சக்தி படைத்ததோ அந்த பொருட்கள் எல்லாம் என் ஒளியின் ஒரு பகுதி என்பதை அறிவாயாக. அனைத்து உலகங்களையும் எனது யோக சக்தி என்னும் ஆற்றலால் தாங்கி நிற்கிறேன்.