Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் ... பாரியூர் வகையறா கோவில் உண்டியல்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் நவராத்திரி கொலு கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2019
04:10

தேனி: பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சார்பில், நாகலாபுரத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி துவக்க விழா நடந்தது.தேனி வித்யாலாயா கிளை நிர்வாகி சகோதரி விமலா பேசுகையில், நவ’ என்றால் - ஒன்பது, புதுமை, ராத்திரி என்றால் இரவு, அறியாமை என்று பொருள்.

இதன் சிறப்பம்சம் கொலு வைப்பதாகும். கொலு என்றால் அழகு. அதாவது பல படிகளை கொண்ட மேடையில் பலவிதமான பொம்மைகளை மிக நேர்த்தியாக அலங்கரித்து வைப்ப தாகும். கொலுவை கண்காட்சியாக பார்க்காமல் வாழ்க்கையின் படி நிலையை உயர்த்தும், ஆன்மிக சிந்தனையுடனும் பார்க்க வேண்டும்.

கொலுவை கீழ்ப்படியில் இருந்து மேலே தேவர்களை வைத்து பூஜிக்கிறார்கள். ஆனால், நாம் ஒவ்வொரும் உயிரினங்கள் போல கீழ் நிலைக்கு சென்றுவிடாமல் மகான்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாக விளங்க வேண்டும் என்பதையே அது உணர்த்துகின்றன. இவ்விழாவில் முக்கியமாக பராசக்தி, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட தெய்வ உருவங் களை கொலுவில் வைத்து, தத்தமது தேவைகளை கேட்டு பூஜிக்கிறார்கள்.

தியானம் செய்யும் போது இந்த அனைத்து சக்திகளும் அதாவது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியவை நமக்குள் வந்து விடுகிறது,” என்றார். முன்னதாக விழாவை நாகலா புரம் கிராம முக்கிய நிர்வாகிகள் விளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். சகோதரர் ராதாகிருஷ் ணன் வரவேற்றார். சகோதரி வசந்தா தொகுத்து வழங்கினார். ஏராளமானோர் கொலு கண் காட்சியை பார்வையிட்டனர்.

* தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பத்ரகாளியம்மன் கோயில் சார்பில், தேனி மேலத்தெரு பத்ரகாளியம்மன் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா, கொலு கண் காட்சி நடந்து வருகிறது. நாடார் சரஸ்வதி அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நவராத்திரி நான்காம் நாள் விழாவில் மகா மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் தரிசித்தனர். உறவின்முறை நிர்வாகிகள் பங்கேற்றனர் தேவஸ்தான செயலாளர்கள் சந்திரசேகரன், சுப்புராம், இணைச் செயலாளர்கள் பாலாஜி, பத்ரகாளியம்மன் கோயில் பராமரிப்புக்குழு, கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி பொறியில் கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, கல்லுாரி இணைச் செயலாளர் ராஜ்குமார், முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர்கள் மாதவன், சிவகணேசன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar