பதிவு செய்த நாள்
08
அக்
2019
03:10
ஆத்தூர்: வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஆத்தூர் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில், வள்ளலாரின், 197வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (அக்., 7ல்) நடந்தது.
ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்புறம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், அறக் கட்டளை தலைவர் ரத்னகுமார், செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் விஸ்வநாதன், இயக்குனர்கள் உள்பட பலர், மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.