Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அபார ஆற்றல் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பண புழக்கம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பெண்களால் நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
15:52

இந்த மாதம் சூரியன் சாதகமற்ற நிலைக்குச் சென்றாலும் கவலை வேண்டாம். அக்.28 ல் குருவும், அக்.29ல் சுக்கிரனும்  சாதகமான இடத்துக்கு வருகின்றனர். செவ்வாய் நவ.12 வரை நன்மை தருவார். ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கும் ராகுவால் நன்மை தொடரும். செவ்வாயால் செயலில் வெற்றி ஏற்படும். பொருளாதார வளம் கூடும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகமுண்டு. நவ.12க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் வகையில் தொல்லை வரலாம். சூரியனால் அவப்பெயர் வரலாம். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.

புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன், மனைவி இடையே இணக்கம் இருக்காது. சுக்கிரனால் அக்.29க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் நன்மை காண்பீர்கள். குருவால் அக்.28க்கு பிறகு குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

சிறப்பான பலன்கள்:
தொழிலதிபர்களுக்கு ராகு முயற்சிகளில் வெற்றியை அளிப்பார்.  அக்.29க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும்.
வியாபாரிகள் அக்.29க்கு பிறகு முக்கிய பொறுப்பை பெண்களின் வசம் ஒப்படைத்து நன்மை கிடைக்கப் பெறுவர்.  
அரசு பணியாளர்களுக்கு அக்.28க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அக்.29க்கு பிறகு சக பெண் ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
மருத்துவர்கள் கூடுதல் நன்மை கிடைக்க பெறுவர் வக்கீல்கள் சந்திக்கும் வழக்குகளில் வெற்றி காண்பர்.  
ஆசிரியர்களுக்கு அக்.29க்கு பிறகு அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு மறையும்.  
போலீஸ், ராணுவத்தினர் நல்ல முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். அக்.29க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும்.  
கலைஞர்களுக்கு அக்.29 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு விருதும் கிடைக்கும்.
விவசாயிகள் நவீன இயந்திரம் வாங்குவர். மஞ்சள், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் மூலம் வருமானம் கூடும்.
கல்லூரி மாணவர் அக்.28க்கு பிறகு  வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு  நவ.1க்கு பிறகு வழக்குகளில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
வியாபாரிகள் அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளரைத் தக்க வைக்க நேரிடும்.
பணியாளர்களுக்கு அலைச்சல், வேலைப்பளுவும் தொடரும்.
ஐ.டி. துறையினர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். கோரிக்கை தாமதமாகும்.
போலீஸ், ராணுவத்தினர் நவ.1க்கு பிறகு பணிச்சுமைக்கு ஆளாவர்.  
அரசியல்வாதிகள் நவ.12க்கு பிறகு  பலனை எதிர்பாராமல் பாடுபடுவர்.  
கலைஞர்கள் தீய சேர்க்கையால் பண இழப்புக்கு ஆளாகலாம்.
விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வராது.
பள்ளி மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம்.

* நல்ல நாள்: அக்.19,20,26, 27,28,29 நவ.3,4,5,6, 7,11,12,16
* கவன நாள்: அக்.30,31 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: சிவப்பு, நீலம்   

பரிகாரம்:
●  தினமும் காலையில் சூரிய தரிசனம்
●  புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு
●  வெள்ளியன்று மகாலட்சுமிக்கு தீபம்

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »
temple
புதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்
 
temple
இந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்
 
temple
கடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால்  நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.