Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குடும்பத்தில் மகிழ்ச்சி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத வருமானம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சுக்கிரனால் யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
16:04

சுக்கிரன் மட்டும் மாதம் முழுவதும் யோகம் அளிப்பார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். முயற்சி வெற்றி பெறும். சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு, மரியாதை உயரும். அக்.28 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

புதனால் அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை, பண விரயம் ஏற்படலாம். அக்.28க்கு பிறகு குருவால் மனக்குழப்பம், அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு. உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உண்டாகும். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.

பெண்கள் குடும்பத்தினருடன் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.  சுக்கிரனால் பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவி கிடைக்கும். நவ.12 க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். சூரியனால் ஆரோக்கியம் மேம்படும். கடந்த மாதம் இருந்த அலைச்சல், சோர்வு மறையும். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு மாத முற்பகுதியில் அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
வியாபாரிகள் வங்கி நிதியுதவி மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.
அக்.28 வரை அனுகூலமான காலகட்டம்.  தங்கம்,  வெள்ளி வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப்பெறுவர்.
அரசுப்பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெறுவர்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அக்.28 க்குள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
ஐ.டி. துறையினர் விண்ணப்பித்த  கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
ஆசிரியர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  பதவி உயர்வு கிடைக்கும்.
வக்கீல்கள் வழக்கில் சாதுர்யமாக வாதாடி வெற்றி காண்பர்.
மருத்துவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் சிலர் பெண்களால் அவப் பெயருக்கு ஆளாகலாம் கவனம்.  
வியாபாரிகள் வாடிக்கையாளரை தக்க வைக்க விடாமுயற்சி தேவைப்படும். நவ.12க்கு பிறகு எதிரி தொல்லை, மறைமுகப்போட்டி உருவாகலாம்.
அரசு பணியாளர்கள் அக்.28க்கு பிறகு வேலையில் கூடுதல் கவனம்  செலுத்தவும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர்.
நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் நவ.12க்கு பிறகு விழிப்புடன் பணிபுரிவது அவசியம்.
மருத்துவர்கள்  பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செயல்படுவது நல்லது. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
வக்கீல்களுக்கு முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். பிறருக்கு  கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.
அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பலன்
கிடைக்காது. தலைமைக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். பக்கத்து நிலத்துக்காரர் வகையில் தொல்லை வரலாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு நடக்கவும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

* நல்ல நாள்: அக்.19,20,21, 22,23,26,27,30,31 நவ.6,7,8,9,10,16
* கவன நாள்: நவ.11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:4,8
* நிறம்: வெள்ளை

* பரிகாரம்
●  தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
●  செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
●  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.