கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், புரட்டாசி கிருத்திகை விழா, நேற்று நடந்தது.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாதம்தோறும், கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், புரட்டாசி இரண்டாவது கிருத்திகை விழா, நேற்று நடந்தது.பிரார்த்தனையாக மொட்டையடித்த பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடினர். தொடர்ந்து, கந்தசுவாமியை வழிபட்டனர்.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, மூலவர் கந்த சுவாமிக்கு மஹா அபிஷேகமும், மயில் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வைபவமும் நடந்தது.